உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்!
ரஷ்யாவுன் போர் மூளும் அபாயம் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி Oleksiy Danilov புதனன்று கூறியதாவது, 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைனிலிருந்து பிரிந்து இருக்கும் Donetsk மற்றும் Luhansk பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் என கூறினார்.
அவசரகால நிலை 30 நாட்கள் நீடிக்கும் என்றும், மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskiy அணு ஆயுதங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கவில்லை என்றும் Danilov கூறினார்.
உக்ரைன் அணு ஆயுதங்களை உருவாக்குவது ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என புடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் 2014 முதல் Donetsk மற்றும் Luhansk பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
Donetsk மற்றும் Luhansk இரண்டையும் சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ள ரஷ்யா, இரண்டு பிராந்தியங்களிலும் அமைதியை நிலைநாட்ட அதன் படைகளை பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.