இஸ்ரேலை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்... வலியுறுத்தும் ஐ.நா. நிபுணர்
இஸ்ரேலுடனான ஆயுதத் தடையை விதிக்கவும், வர்த்தக மற்றும் நிதி உறவுகளைத் துண்டிக்கவும் உலக நாடுகளுக்கு ஐ.நா நிபுணர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இனப்படுகொலை
காஸாவில் ஒரு கொடூர இனப்படுகொலை நடவடிக்கைகளை இஸ்ரேல் நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்கள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஆற்றிய உரையில்,
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் நிலைமை மிகவும் மோசமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நவீன வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றிற்கு இஸ்ரேல் பொறுப்பு என்றார்.
ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருவதுடன், ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலுக்கு தங்களை தற்காத்துக்கொள்வது இஸ்ரேலின் தனியுரிமை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயர்களைக் கொண்ட தனது சமீபத்திய அறிக்கையை அல்பானீஸ் சமர்ப்பித்தார்.
இது ஒரு அமைப்பு
இது வெறும் பட்டியல் அல்ல என பதிவு செய்துள்ள அல்பானீஸ், இது ஒரு அமைப்பு என்றும், அதை நாம் அம்பலப்படுத்த வேண்டியது கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நாடுகள் தடை செய்ய வேண்டும் என்றும் அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் நிறுத்தி, சர்வதேச சட்ட மீறல்களில் ஈடுபடுவதால் நிறுவனங்கள் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அல்பானீஸின் சமீபத்திய அறிக்கை என்பது சட்டப்பூர்வமாக ஆதாரமற்றது, அவதூறு பரப்புவது மற்றும் அவரது பொறுப்புக்கு வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்வது என இஸ்ரேல் பதிலளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |