ஆந்திரா, பீகாரை தவிர மற்ற மாநிலங்கள் அல்வா சாப்பிடுங்கள்: நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல்
ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
நிதி ஒதுக்கீடு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 -வது முறை ஆட்சியமைத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7 -வது பட்ஜெட் இதுவாகும்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரகாஷ் ராஜ் விமர்சனம்
இந்த மாநிலங்களை தவிர கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஆந்திரா - பீகார் பட்ஜெட் வெளியாகிவிட்டது. மற்ற மாநிலங்கள் மகிழ்ச்சியாக அல்வா சாப்பிடுங்கள்" என்று மத்திய பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |