எண்ணெயைத் தொட்டால்... வெனிசுலா விவகாரத்தில் ட்ரம்பிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சீனா
நிக்கோலஸ் மதுவை அமெரிக்க இராணுவம் கைது செய்ததன் பின்னர், வெனிசுலாவை நிர்வகிக்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா எண்ணெய் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது என சீனா வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க் நகர நீதிமன்றத்தில் மதுரோவும் அவரது மனைவியும் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையிலேயே சீனாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
வெனிசுலாவில் உள்ள மிகப்பெரிய மற்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களின் மீது கட்டுப்பாடு செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் இனி வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை நிர்வாகம் செய்வார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வெனிசுலாவின் எண்ணெய் தொழிலில் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, அந்த நாட்டிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வது தொடர்பாக கராகஸுடன் தங்களுக்கு உள்ள ஒப்பந்தங்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ளது.
வெனிசுலாவின் நட்பு நாடான சீனா, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டுமின்றி, இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டம், சர்வதேச உறவுகளில் உள்ள அடிப்படை நெறிமுறைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அப்பட்டமான மீறல் என்றும் சீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெருங்கிய உறவு
இதற்கிடையில், வெனிசுலா கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள், அமெரிக்கப் படைகளிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் நாட்டிலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது.

1998-ல் ஆட்சிக்கு வந்த ஹ்யூகோ சாவேஸின் கீழ் வெனிசுலா மற்றும் சீனாவின் உறவு வலுப்பெற்றது, மேலும் அவர் லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் மிக நெருங்கிய கூட்டாளியாக ஆனார். 2013-ல் சாவேஸ் இறந்த பிறகு, மதுரோ நாட்டின் ஜனாதிபதியான பின்னரும் இந்த நெருங்கிய உறவு தொடர்ந்தது.
மேலும், 2016-ல் மதுரோ தனது மகனை உயர்தரமிக்க பெக்கிங் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். அதற்குப் பதிலாக, சீனா வெனிசுலாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் பெருமளவு பணத்தை முதலீடு செய்தது.
2017 முதல் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தடைகளை கடுமையாக்கியபோது, இது வெனிசுலாவுக்கு ஒரு பொருளாதார உயிர்நாடியாக அமைந்தது.
வெளியாகியுள்ள தரவுகளில் அடிப்படையில், சீனா 2024 ஆம் ஆண்டில் வெனிசுலாவில் இருந்து சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளது. இந்த நிலையிலேயே, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைத் தொட வேண்டாம் என சீனா பகிரங்கமாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |