தலிபான்களுக்கு எதிராக களத்தில் இறங்கிய ஆப்கான் பெண்களால் பரபரப்பு! மக்கள் பேரணியில் துப்பாக்கி சூடு, இருவர் பலி, 12 பேர் காயம்.. உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் புதன்கிழமை தேசியக் கொடியினை ஏந்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் தலிபான்களால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன.
பசுபிக் பெங்கடலில் அமைந்துள்ள வனுவாட்டு குடியரசில் 7.1 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நேற்று திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, அந்நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறூ பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.