நிறுத்துங்கள்... இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச வெளியிட்ட பதிவு
குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தவும், அமைதியாக இருக்கவும் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் ஸ்திரத்தன்மையை ஒருமித்த கருத்து மூலம், அரசியலமைப்பு ஆணையிற்குள் மீட்டெடுக்கவும், பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்ச! வைரலாகும் ஓடியோ
கொழும்பில் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த குடும்ப வீடு உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகள் பலரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
231 பேர் காயமடைந்த நிலையில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.