16 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்! 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி
மகளிர் பிக்பாஷ் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது.
வைட்-ஹாட்ஜ் அதிரடி
WBBL 2025 தொடரின் 32வது போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
Danni Wyatt-Hodge just continues to make runs in #WBBL11 👏
— Weber Women's Big Bash League (@WBBL) December 1, 2025
She's just brought up her fourth half-century of the tournament! pic.twitter.com/v243U90oz9
முதலில் களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் லீ 20 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த நட் சிவர்-ப்ரண்ட் 20 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாச, வைட்-ஹாட்ஜ் அதிரடி அரைசதம் அடித்தார்.
அபார வெற்றி
அவர் 47 பந்துகளில் 71 ஓட்டங்களும், வில்லானி 14 பந்துகளில் 23 ஓட்டங்களும் விளாச, ஹோபர்ட் அணி 17 ஓவர்களில் 176 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் அணி 15.5 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் ஹோபர்ட் அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் (DLS விதிப்படி) அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மெல்போர்ன் அணி தரப்பில் சஷா மோலோனே 31 (24) ஓட்டங்கள் எடுத்தார்.
ஹோபர்ட் அணியின் தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய மோலி ஸ்ட்ரானோ (Molly Strano) 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
SCREAMER! 😱
— Weber Women's Big Bash League (@WBBL) December 1, 2025
What a catch that is from Danni Wyatt-Hodge! #WBBL11 pic.twitter.com/j0xK3guHNu
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |