தெருநாய்களுக்கு உணவளிக்க பணம் பறிக்கும் கும்பல் (காணொளி)
நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களுக்கு உணவளிக்க பணம் பறிக்கும் வேலை நடப்பதாக விலங்குகள் நல ஆர்வலர் முரளி தெரிவித்துள்ளார்.
அவர், 2001யின் கருத்தடை விதிமுறைகள்தான் சட்டத்தை விட மேலானது என மேனகா காந்தி நீதிமன்றங்களில் வாதாடினார் என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் 1998 ULB விதியில் 107 உட்பிரிவு 2யில் நாய், பன்றிகள் அதிகரித்தால் அப்புறப்படுத்த வேண்டும் என்கிறது.
ஆனால், ஒருவரை நாய் கடித்துவிட்டால் விதிமுறை 16யின்படி கார்ப்பரேஷன் அதனை அப்புறப்படுத்த மாட்டார்கள்.
நாய் யாரையாவது கொன்றுவிட்டால் அதனை காப்பகத்தில் வைத்து பார்ப்பார்கள். அந்த நாய்க்கு ரேபிஸ் இல்லையென்றால் திரும்பவும் அதே இடத்தில் கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.
2023யில் நாயை கொல்லவே கூடாது என்று மாற்றிய எழுதிய விதிமுறைதான் இந்தியா முழுக்க இந்த பிரச்சனைக்கு காரணம்.
இது ஒருவரின் தவறு இல்லை; ஒவ்வொரு மாநிலத்திலும் 20 ஆண்டுகளாக சரியாக கருத்தடைகளை செய்யாமல் விட்டது அந்தந்த கார்ப்பரேஷனும், பஞ்சாயத்தும்தான் என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |