பிரித்தானியாவை அடுத்து.... சிறார் இறப்பு தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு 16 சிறார்கள் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது இதன் தாக்கம் பல ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுவதாக பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை 16 சிறார்கள்
பிரான்சில் Strep A பாதிப்பு தீவிரமடைந்து காணப்படுவதாக முதன்முறையாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை 16 சிறார்கள் Strep A பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், தற்போது அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படும் இந்த பாக்டீரியா தொற்று, பிரித்தானியாவில் எதிர்பார்த்ததைவிடவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், Strep A பாதிப்புக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலைகளை வாய்ப்பை பயன்படுத்தி தொடர்புடைய நிறுவனங்கள் அதிகரிக்கும் என்றால் தகுந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் Strep A பாதிப்பு எண்ணிக்கை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பாவின் ECDC அமைப்பு ஒன்றிணைந்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
இதுவரை குறிப்பிட்ட சில நாடுகளே Strep A பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் வெளிப்படையாக அறிவித்துள்ளது எனவும், மிக விரைவில் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
@justgiving
பொதுவாக குளிர்கால மாதங்கள் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் Strep A பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் பிரித்தானியா மற்றும் பிரான்சில் சமீப மாதங்களில் Strep A பாதிப்பு எண்ணிக்கையானது கொரோனா தொற்று பரவலின் முன்பு இருந்ததைவிட மல மடங்கு அதிகம் என கூறுகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் இருந்து 14 வயதுக்கு உட்பட்ட பிரித்தானிய சிறார்களில் 169 பேர்களுக்கு Strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த முறையைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.
Strep A பாதிப்பு சிறார்கள் மரணம்
பிரித்தானியா மட்டுமின்றி, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் Strep A பாதிப்பு காரணமாக சிறார்கள் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளன.
இதனையடுத்து, ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.