காசா அருகே உதவிபெற காத்திருந்த மக்கள் மீது குண்டுவீச்சு! 70 பேர் பரிதாப பலி
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா அருகே உதவிப் பொருட்கள் பெற காத்திருந்த பாலஸ்தீன மக்கள் 70 பேர் பலியாகினர்.
30,000 பேர் பலி
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா முனையில் இஸ்ரேலிய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரபா நகரை தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனியர்கள் 70 பேர் இஸ்ரேலிய தாக்குதலில் பலியாகியுள்ளனர். ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் உதவிப் பொருட்கள் பெறுவதற்காக காசா நகரின் அருகே காத்திருந்துள்ளனர்.
280 பேர் காயம்
அப்போது அப்பகுதியில் இஸ்ரேல் படைகள் வீசிய குண்டுகள் அவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தான் அந்த 70 பேர் கொல்லப்பட்டதாகவும், 280 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |