குழந்தைகளை கவரும் ஹாபிட் ஹவுஸ்…தற்செயலாக கட்டியெழுப்பிய 90 வயது முதியவர்
ஸ்டூவர்ட் கிராண்ட் பல தசாப்தங்களாக பாழடைந்த பண்ணை கட்டிடத்தை ஹாபிட் ஹவுஸ் என்று அழைக்கப்படும் அலங்கார வீடாக மாற்றியுள்ளார்.
கவனம் ஈர்த்த 90 வயது தாத்தா
ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸ் பகுதியில் உள்ள க்ளென் அஃப்ரிக்கில் பாழடைந்த வீடு மற்றும் பாழடைந்த கால்நடை கொட்டகை என அழைக்கப்படும் நிலத்தை ஸ்டூவர்ட் கிராண்ட் 90 வயதான முதியவர் வாங்கியுள்ளார்.
திறமையான இணைப்பாளரான ஸ்டூவர்ட் மொத்தம் 14 ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வேலை செய்த பிறகு ஹைலேண்ட்ஸில் மாட்டு கொட்டகையாக இருந்த இடத்தை தனது வீடாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.
முதலில் ஸ்டூவர்ட் கிராண்ட் அந்த சொத்தை தற்காலிக இருப்பிடமாக உருவாக்கவே எண்ணி வேலைகளை தொடங்கியுள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல வீட்டின் மீதான உழைப்பு பெரும் அன்பாக மாறியுள்ளது.
இதனால் வீட்டை முழுவதுமாக அலங்கரிக்க முடிவு செய்து, வேலையை தொடங்கியுள்ளார்.
ஹாபிட் ஹவுஸ்
ஸ்டூவர்ட் கிராண்ட் முதலில் வேலையை தொடங்கும் போது சம்பந்தப்பட்ட சொத்தில் கதவுகள் எதுவும் இல்லாமல் நான்கு சுவர்கள் மட்டுமே எஞ்சி இருந்துள்ளது, மேலும் தொடக்கத்தில் வீட்டு மின் சாதனம் 100W பல்பு மட்டுமே.
ஸ்டூவர்டின் பல ஆண்டுகள் உழைப்புக்கு பிறகு அதை ஒரு வசதியான சிறிய வீடாக மாற்றினார், இதற்கான கட்டுமானத்திற்காக பெரும்பாலும் மரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு படியிலும் படிந்த கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் செதுக்கப்பட்ட ஆந்தையின் தலைகளை அவர் நிறுவியுள்ளார்.
வேலைகளை ஓரளவு நிறைவடைந்த நிலையில் ஸ்டூவர்டின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஜே ஆர் ஆர் டோல்கீனின் தி ஹாபிட் அல்லது லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படைப்புகளில் வரும் வீடுகளின் தோற்றத்தை ஒத்து இருந்தது.
இதனால் பல காலங்களாக பாழடைந்த வீடு என்று அழைத்த மக்கள் தற்போது ஹாபிட் ஹவுஸ் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.
ஆனால் இது குறித்து கேட்ட போது, 1980 களில் திட்டத்தின் பணிகளைத் தொடங்கும் போது அது தனது நோக்கம் அல்ல, இது தற்செயலாக நடந்த விபத்து என்று தெரிவித்துள்ளார்.