ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்: கொலையில் முடிந்த கொள்ளை முயற்சி
இந்தியாவில், தனது மொபைலைப் பறிக்க முயன்ற இளைஞர்களுடன் போராடிய இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்
கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை நெருங்கிய இளைஞர்களில் ஒருவர், கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார்.
Credit: .
ஆனால், கீர்த்தி தன் மொபைலை விட மறுக்க, அந்த இளைஞர் மொபைலை வேகமாக இழுக்க, கீர்த்தி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
மரணத்தில் முடிந்த கொள்ளை முயற்சி
கீழே விழுந்த கீர்த்திக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது. அவரது தோழி ஒருவர் உடனடியாக கீர்த்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
கீர்த்திக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், அவரது மூளையிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துவிட்டார்.
பொலிசாரை துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள்
இதற்கிடையில், கீர்த்தியின் மொபைலைப் பறித்துச் சென்ற இளைஞர்களை பொலிசார் தீவிரமாகத் தேடத்துவங்கியுள்ளனர்.
ஓரிடத்தில் அவர்களை பொலிசார் கண்டுபிடிக்க, பொலிசாரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்துவங்கியுள்ளார்கள் அந்த இருவரும்.
Al Jazeera
பொலிசார் அவர்களைத் திருப்பிச் சுட, ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார், மற்றொருவர் தப்பியோடிவிட்டார். சிக்கியவர் பெயர் பல்பீர் குமார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவரிடம் கீர்த்தியின் மொபைல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள். கொலை வழக்காக முடிந்துள்ள மொபைல் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |