அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு.. இது தான் காரணமா? வீடியோ வெளியிட்ட அண்ணன்
தமிழக மாவட்டம், திருவண்ணாமலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மயங்கி விழுந்த மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள ராந்தம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை (15) மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று இந்த பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் பள்ளி மாணவர்கள் சுமார் 3 மணி நேரமாக வெயிலில் நின்றதாக கூறப்படுகிறது.
இதனால், நீண்ட நேரம் வெயிலில் நின்ற 10 வகுப்பு மாணவி அஞ்சலை மயங்கி விழுந்தார்.
மாணவி உயிரிழப்பு
இதனால், பள்ளியின் ஆசிரியர்கள் மாணவி அஞ்சலையை மீட்டு மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், மாணவியின் நிலை குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினர்.
அங்கு, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஞ்சலை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் இறப்புக்கான காரணம் குறித்த முழு தகவலும் பிரேத பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே தெரியவரும்.
சகோதரர் வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், மாணவி அஞ்சலையின் சகோதரர் வெளியிட்ட வீடியோவில், "என் தங்கை அஞ்சலைக்கு எந்தவித உடல்நல பிரச்சனையும் இல்லை என்றும் வெயிலில் நிற்க வைத்ததாலேயே அவர் உயிரிழந்துவிட்டார் எனவும்" கூறியுள்ளார்.
மேலும், என் சகோதரியின் இறப்புக்கான நியாயம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட மங்கலம் மேல்நிலைப் பள்ளியில் துணை சபாநாயகர் திரு பிச்சாண்டி கலந்து கொண்டு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை 3மணி நேரம் வெயிலில் அமர வைத்ததன் விளைவாக 10வது படிக்கும் அஞ்சலி என்ற மாணவி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
— M Nachiappan (@BJPNach) September 5, 2023
திமுக அராஜகம் முடியுமா? விடியுமா? pic.twitter.com/4vvKN8tVKX
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |