விருப்பமான பாஸ்தா உணவு... சில மணி நேரத்தில் பறிபோன இளைஞரின் உயிர்: விரிவான பின்னணி
பெல்ஜியத்தில் மாணவர் ஒருவர் தமக்கு விருப்பமான பாஸ்தா உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாந்தியும் வயிற்றுப்போக்கும்
குறித்த பாஸ்தா உணவானது ஐந்து நாட்களுக்கு முன்னர் சமைக்கப்பட்டது எனவும், சம்பவத்தன்று இரவு அந்த உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிட்ட நிலையில், 10 மணி நேரத்தில் அந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
@getty
20 வயதான அந்த மாணவர் தமக்கு விருப்பமான அந்த பாஸ்தா உணவை சூடாக்கி சாப்பிட்டு விட்டு, நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். ஆனால் தலைவலி மற்றும் வயிற்று வலியால் கிளம்பி சென்ற அரை மணி நேரத்திலேயே அந்த மாணவர் அறைக்கு திரும்பியுள்ளார்.
தொடர்ந்து வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவரிடம் செல்லாமல், அந்த நிலையிலேயே தூங்கச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த நாள் பகல் பாடசாலைக்கு செல்லாததை அறிந்த பெற்றோர், அவனது அறைக்கு விசாரிக்க சென்றுள்ளனர்.
சில மணி நேரங்களுக்குள்
அவர்களே மகன் இறந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். ஐந்து நாட்களுக்கு முந்தைய பாஸ்தா உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிட்ட 10 மணி நேரத்தில் அந்த மாணவன் மரணமடைந்துள்ளான்.
@getty
இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், பெரும்பாலான மக்கள் பாஸ்தா போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் சமைத்து சில மணி நேரங்களுக்குள் அந்த வகை உணவுகளை மீதமின்றி முடித்து விடுங்கள்.
சில மணி நேரங்களுக்கு மேல் அந்த உணவு மீதமிருந்தால், சாப்பிடுவதில் கவனம் தேவை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |