இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவருக்கு ரூ.3.3 கோடி இழப்பீடு: கல்லூரி நிர்வாகத்தின் சர்ச்சை முடிவு
பல்கலைக்கழக போராட்டத்தின் போது துர்நாற்றம் வீசும் பொருளை பயன்படுத்தியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு போராட்டம்
கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் இஸ்ரேலிய மாணவர் ஒருவர் துர்நாற்றம் வீசும் பொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதற்காக ஜனவரி முதல் மே வரை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலால், பல மாணவர்கள் வாந்தி, வயிற்று வலி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் யூத இளங்கலை மாணவர் கடுமையான வாந்தி, தலைவலி மற்றும் வேதியியல் வெளிப்பாடு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
இந்த சம்பவத்தை பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் பொலிஸார் வெறுப்பு குற்றமாக கருதி விசாரணையை தொடங்கினர்.
அதே நேரம் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது “துர்நாற்றம் வீசும் தெளிப்பானை” பயன்படுத்துவது என்பது “பாதிப்பு ஏற்படுத்தாத தன்னுடைய பேச்சுரிமையின் வெளிப்பாடு” கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்.
மாணவருக்கு இழப்பீடு
இந்நிலையில், கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது துர்நாற்றம் வீசும் பொருளை பயன்படுத்தியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவருக்கு கிட்டத்தட்ட $400,000 (₹3.3 கோடி) இழப்பீடு வழங்கியதாக ஐவி லீக் கல்லூரி(Ivy league college) ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தின் தீவிரத்தையும் சக மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் மீறி, இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் ஐவி லீக் கல்வி நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்ற இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |