ஐரோப்பா முழுவதும் பரவும் மாணவர் போராட்டம் - கல்வி நிதி குறைப்புக்கு எதிர்ப்பு
Student Protests Spread Across Europe 2026: ஐரோப்பா முழுவதும் மாணவர் போராட்டங்கள் பரவிவருகின்றன.
ஐரோப்பா முழுவதும் பரவும் மாணவர் போராட்டம்
பிரான்சில் தொடங்கிய மாணவர் போராட்டம் தற்போது இத்தாலி, பெல்ஜியம், கிரீஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியுள்ளன.
கல்வி நிதி குறைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை, பழைய பள்ளி கட்டிடங்கள், அதிகப்படியான கல்வி செலவுகள் ஆகிய பிரச்சினைகள் மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியுள்ளன.

பிரான்சில் செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் தொடங்கிய இந்த இயக்கம், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள், தொழிற்சங்கங்கள் ஆகியோரின் ஆதரவுடன் விரைவில் பரவியது.
6,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன. Lens நகரில் நடந்த மோதலில் 15 வயது சிறுவன் கையை இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெல்ஜியத்தில், Liège நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி செலவுகள் மற்றும் வகுப்பறை நெரிசலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தாலியில், “பிரான்சைப் போல செய்வோம்” என்ற கோஷத்துடன் மாணவர்கள் பள்ளிகளை ஆக்கிரமித்துள்ளனர். கிரீஸில், மாணவர்கள் நாடு முழுவதும் கூட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அயர்லாந்து, ஜேர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் மாணவர்கள் கல்வி நிதி, கட்டண உயர்வு, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிலும் பிரச்சினைகள் வேறுபட்டாலும், மாணவர்களின் கோரிக்கை ஒரே மாதிரியாக உள்ளது. அரசுகள் கல்விக்கான முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |