பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டிய விவகாரம்: சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டவர் கைது.. மாணவ,மாணவி மீதும் நடவடிக்கை
சமூக வலைதளத்தில் வைரலான பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டிய வீடியோ
இதுபோன்ற சம்பவங்கள் பொது இடங்களில் நடக்கும்போது சமூக பொறுப்புணர்வுடன் அதனை தடுக்க வேண்டும் அல்லது பொலிஸிடம் புகார் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
தமிழக மாவட்டம் கடலூரில் பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டிய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிற்றுந்து நிறுத்தத்தில் வைத்து பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விவகாரம் பெரும் கண்டனங்களுக்குள்ளானது.
அதனைத் தொடர்ந்து மாணவர், மாணவியை அழைத்து பொலிஸார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 நாட்கள் மனநல ஆலோசனை கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தாலி கட்டிய மாணவனை கைது செய்ய பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.