பாராசிட்டமால் குறித்த ட்ரம்பின் கருத்து: சமீபத்திய ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், கர்ப்பிணிகள் பாராசிட்டமால் என்னும் வலி நிவாரணியை எடுத்துக்கொள்வதால், அவர்களுடைய கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
ஆனால், அவரது கருத்து ஆதாரமற்றது என ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆய்வு முடிவுகள்
கர்ப்பிணிகள் பாராசிட்டமால் என்னும் வலி நிவாரணியை எடுத்துக்கொள்வதால், அவர்களுடைய கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

கர்ப்ப காலத்தில் பாதுகாப்பான வலி நிவாரணி என மக்கள் நம்புவது பாராசிட்டமால் மாத்திரை ஒன்றைத்தான். ஆகவே, ட்ரம்பின் கருத்து கர்ப்பிணிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏழு அறிவியலாளர்களைக் கொண்ட ஒரு குழு, இந்த விடயம் தொடர்பில் தீவிர ஆய்வொன்றை மேற்கொண்டது.
ஆய்வின் முடிவுகள், ட்ரம்ப் கூறுவதைப்போல், கர்ப்பிணிகள் பாராசிட்டமால் என்னும் வலி நிவாரணியை எடுத்துக்கொள்வதால், அவர்களுடைய கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்காது என தெரிவித்துள்ளன.

ஆகவே, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளப்படும்போது, கர்ப்பிணிகளுக்கு பாராசிட்டமால் பாதுகாப்பானதே என ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இந்த ஆய்வின் முடிவுகள், பாராசிட்டமாலின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு முடிவு கட்டும் என நம்புகிறோம் என்றும், கர்ப்பிணிகள், வலி அல்லது காய்ச்சல் ஏற்படும்போது, அவற்றிலிருந்து விடுபட தங்களுக்கு ஒரு மருந்து உள்ளது என்பதை அறிந்து பாதுகாப்பாக உணரலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |