செய்த நல்ல செயலுக்காக புடினால் கைது செய்யப்பட்டுள்ள அழகிய இளம்பெண்...
உக்ரைனியர்களுக்கு உதவியதற்காக அழகிய இளம்பெண் ஒருவர் ரஷ்ய ரகசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழகி
உடலால் மட்டுமல்ல, தன் கொள்கைகளால், மனதாலும் அழகானவரான Nadezhda Rossinskaya (27) என்னும் இளம்பெண் ரஷ்ய ரகசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில் ஒன்றில் பயணிக்கும்போது Nadezhdaவைக் கைது செய்த பொலிசார், அவரை Belgorod என்னுமிடத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்.
Nadezhda Rossinskaya
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, Nadezhdaவின் சகோதரியான Elena Egorovaவும் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.
உக்ரைன் அகதிகளுக்கு உதவி
Nadezhda, ரஷ்யாவில் சிக்கிக்கொண்டுள்ள உக்ரைன் அகதிகளுக்கு உதவிகள் செய்துவந்துள்ளார். மொடலும் புகைப்படக்கலைஞருமான Nadezhda, மனிதாபிமான உதவிகள் பெற்று, அதன் மூலம் சில அகதிகள் உக்ரைன் திரும்ப உதவியுள்ளார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் உக்ரைன் ஊடுருவலுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார் Nadezhda.
Nadezhda Rossinskaya
Nadezhda உக்ரைன் ராணுவத்துக்கு உதவுவதாகவும், பணம் சேகரிப்பதாகவும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |