சூடானில் ரமலானை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தமிருந்தும் தொடரும் துப்பாக்கிச்சூடு: உணவுக்காக அவதிப்படும் மக்கள்
சூடானில் 72 மணி நேரப் போரை நிறுத்த ஒப்பந்தம் பெற்ற பின்னும், ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
சூடானில் இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை கார்ட்டூமில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
@afp
இராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக நடைபெறும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, சர்வதேச நாடுகளின் முயற்சியை கண்டு கொள்ளாமல் போர் தொடர்கிறது.
ரமலான் தொழுகையின் போது வெடிச்சத்தம்
இஸ்லாமியர்களின் பண்டிகையான இன்று ரமலான் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை நடைபெற்ற பிராத்தனையின் போதும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
ரமலானை முன்னிட்டு மக்கள் பண்டிகையை கொண்டாட தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்ததிற்கு ராணுவம், RSF அமைப்பிடம் தெரிவித்திருந்தது.
@dw
இந்த நிலையில் இன்று அதிகாலை தொழுகையின் போது RSF அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் வான்வழி தாக்குதலும் செய்திருக்கிறார்கள்.
டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சூடானின் தலைநகரான கார்ட்டூமில் ஆங்காங்கே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
உணவுக்குப் போராடும் மக்கள் போர்
தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மக்கள் வீதியை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கே மக்கள் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது.
@arabnews
இதனை மீறி வெளியே சென்றால் சரமாரியாகத் துப்பாக்கி சூடு நடத்தப்படுவதாக, அம்மக்கள் செய்தியாளர்களுக்கு அளித்த தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
@afp
இந்த நிலையில் அமெரிக்கா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் சூடானில் நடைபெறும் போருக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன.