தெற்கு சூடானில் மருத்துவமனை மற்றும் சந்தை மீது குண்டு வீச்சு: பலர் உயிரிழப்பு!
தெற்கு சூடானில் மருத்துவமனை மற்றும் சந்தை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் குண்டு வீச்சு
தெற்கு சூடானில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான குண்டுவீச்சில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனை மற்றும் உள்ளூர் சந்தை ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதாக மருத்துவ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நிலையற்ற நிலையில் உள்ள அந்த நாட்டில், இந்த சம்பவம் மீண்டும் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
சரமாரி துப்பாக்கி சூடு
எல்லைகள் இல்லா மருத்துவர்கள் (MSF) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோங்லேய்(Jonglei) மாநிலத்தில் உள்ள பழைய ஃபங்காக்(Old Fangak) பகுதியில் அவர்கள் நடத்தி வரும் மருத்துவமனையின் மருந்தகத்தின் மீது ஹெலிகாப்டர் துப்பாக்கி ஏவிகள்(helicopter gunships) குண்டு வீசியதாக கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அந்த ஹெலிகாப்டர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை நகரத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்) உள்ளூர் சந்தை ஒன்றை குண்டு வீசியதாகவும் MSF கூறியுள்ளது.
ஃபங்காக் மாவட்டத்தில் உள்ள இந்த மருத்துவமனைதான் 1,10,000க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அந்தப் பகுதிக்கு ஒரே மருத்துவ வசதி என்று அந்த தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த குண்டுவீச்சில் மருத்துவமனையின் அனைத்து மருந்துப் பொருட்களும் அழிந்துவிட்டதாகவும், இது அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |