மாயமான இந்தியப்பெண் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டாரா? இணையத்தில் வெளியாகியுள்ள திகில் வீடியோவின் பின்னணி
வெளிநாடு சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ள நிலையில், அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், அதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் பரவி திகிலை உருவாக்கியுள்ளது.
வெளிநாட்டில் இந்திய இளம்பெண் மாயம்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண்.
சுதிக்ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலின் அருகிலுள்ள கடற்கரையில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
அதற்குப் பிறகு அவர் மாயமாகிவிட்டார். அவருடன் கடைசியாக காணப்பட்ட ஜோஷுவா (Joshua Stevem Ribe, 24) என்னும் இளைஞரை பொலிசார் விசாரித்துவந்த நிலையில், தற்போது நாட்டிலிருந்து வெளியேற ஜோஷுவாவுக்கு பொலிசார் அனுமதியளித்துவிட்டார்கள்.
இணையத்தில் பரவும் திகில் வீடியோ
🌊CAUTION: The family of Sudiksha Konanki now fears she drowned near the RIU Republica Resort in the Dominican Republic.
— John Sitarek (@JohnSitarek) March 19, 2025
WATCH how quickly waves become DANGEROUS.
Joshua Riibe was the last person to see her on March 6 at 4:50am in the surf on the beachfront of the hotel. pic.twitter.com/i7O7tc5PzV
இந்நிலையில், சுதிக்ஷா கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என பொலிசார் கூறியிருந்த விடயத்தை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் பரவி திகிலை உருவாக்கியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு இளைஞரும் ஒரு இளம்பெண்ணும் கடற்கரையில் பிரம்மாண்ட அலைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கீழே விழுகிறார். அதற்குப் பின் அவரைக் காணவில்லை. காண்போருக்கு திகிலை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
அது சுதிக்ஷாவா?
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது சுதிக்ஷா அல்ல. அது 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி எடுக்கப்பட்ட வீடியோ.
அந்த வீடியோவிலிருப்பவர் டயானா ( Diana Belyaeva, 20) என்னும் மொடல். அவருடன் இருப்பவர் டயானாவின் ஆண் நண்பர்.
அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட டயானாவின் உடல் சில நாட்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டதாக US Sun பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்று கூறுகிறது.
ஆக, அந்த வீடியோவிலிருக்கும் பெண், சுதிக்ஷா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் அவர் என்ன ஆனார் என்னும் விடயம் மர்மமாகவே நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |