மகள் உயிருடன் இருக்கிறாரா இல்லையா? இந்திய இளம்பெண்ணின் பெற்றோர் கண்ணீர் கோரிக்கை
வெளிநாடு சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ள நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தவிக்கும் இந்திய இளம்பெண்ணின் பெற்றோர், அவர் இறந்துவிட்டதாகவாவது அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
வெளிநாட்டில் இந்திய இளம்பெண் மாயம்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண்.
சுதிக்ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 6ஆம் திகதி, வியாழக்கிழமை அதிகாலை மாயமானார்.
இளைஞர் மீது சந்தேகம்
புதன்கிழமை இரவு, சுதிக்ஷா, ஆறு பேருடன் அந்த கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஐந்து பேர் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்ப, சுதிக்ஷாவும் ஜோஷுவா (Joshua Stevem Ribe, 24) என்னும் இளைஞரும் மட்டும் கடற்கரையிலேயே இருந்துள்ளார்கள்.
ஜோஷுவா, சுதிக்ஷா குறித்து மாற்றி மாற்றி பேசிவதால், அவர் மீது சந்தேகம் ஏற்படவே, பொலிசார் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துவைத்திருந்தார்கள்.
ஆனால், தற்போது அவர் டொமினிக்கன் குடியரசை விட்டு வெளியேற நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டது.
பெற்றோர் கண்ணீர் கோரிக்கை
இந்நிலையில், சுதிக்ஷா உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தவிக்கும் சுதிக்ஷாவின் தந்தையான சுப்பராயுடுவும் தாய் ஸ்ரீதேவியும் (Subbarayudu and Sreedevi Konanki), அவர் இறந்துவிட்டதாகவாவது அறிவிக்குமாறு டொமினிக்கன் குடியரசுக்கு கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தால், தாங்கள் தங்கள் மகளுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் நடைமுறைகளையாவது துவங்கமுடியும் என அவர்கள் கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |