என் கடைசி ஆசை இது தான்! கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான அதிர்ச்சி பின்னணி
இந்தியாவில் வாலிபர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் கேரளாவை சேர்ந்த அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தனது வீட்டில் அர்ஜூன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ஜூனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அர்ஜூன் எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த கடிதத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எல்லாரும் இருந்தும் நான் தனியாக தான் இருக்கிறேன்.
எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய கடைசி ஆசை எனது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே எனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதியுள்ளார்.
இதற்கிடையில் அர்ஜூன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண் நேற்று முன்தினம் அர்ஜூனின் வீட்டிற்கு வந்து சென்ற பிறகுதான் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
எனவே அர்ஜூன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.