மழைக்கு இதமான சுடசுட சுக்கு மல்லி காபி.., எப்படி தயாரிப்பது?
மழைக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல், சளி போன்றவை நீங்க இந்த சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.
அந்தவகையில், வீட்டிலேயே மழைக்கு இதமான சுடசுட சுக்கு மல்லி காபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சுக்கு- 50g
- மல்லி- 50g
- மிளகு- சிறிதளவு
- அதிமதுரம்- சிறிதளவு
- அஸ்வகந்தா- சிறிதளவு
- சித்தரத்தை- 10g
செய்முறை
முதலில் சுக்கு, மல்லி, மிளகு போன்றவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதிமதுரம், அஸ்வகந்தா, சித்தரத்தை போன்ற அனைத்தையும் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி காற்று புகாத டப்பாவில் வைத்து அடைத்துக் கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் சுக்கு மல்லி பொடியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
இதை வடிகட்டி சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்தால் போதும் சுக்கு மல்லி காபி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |