6 மாத விண்வெளி வாழ்க்கை: பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுல்தான் அல்நேயடி
சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்களாக தங்கியிருந்த ஆராய்ச்சியாளர்கள் 6 பேர் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.
சுல்தான் அல்நேயடி
கடந்த ஆண்டு ஜூலை 25ம் திகதி சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சுல்தான் அல்நேயடி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்காக அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் விண்வெளியில் பயிற்சியில் தங்குவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சுல்தான் அல்நேயடி விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதன்முலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஸ்பேஸ் வால்க் செய்த முதல் நபர் என்ற சாதனையை சுல்தான் அல்நேயடி படைத்தார்.
சுல்தான் அல்நேயடி மொத்தமாக 4,400 மணி நேரத்திற்கும் அதிகமாக விண்வெளியில் இருந்த நிலையில், அங்கு எவ்வாறு தண்ணீர் அருந்துவார்கள், எப்படி சமைத்து சாப்பிடுவார்கள் என்பது போன்ற விவரங்களை புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
பூமிக்கு திரும்பிய 6 பேர்
இந்நிலையில் 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த ஆராய்ச்சியாளர்கள் 6 பேர் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.
சுமார் 17 மணிநேரம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் பயணித்து சுல்தான் அல்நேயடி உட்பட 6 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பாக ஃபுளோரிடா கடற்கரை பகுதியில் தரையிறங்கினர்.
பூமியின் ஈர்ப்பு விசைக்கு தகுந்தவாறு அவர்கள் உடல் மீண்டும் செயல்பட தொடங்க சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் அவர்கள் ஸ்ட்ரக்சரில் வைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
2 வாரங்களுக்கு பிறகு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |