போர்க்குற்ற விசாரணை குறித்த சுமந்திரனின் கருத்து செல்லாது: சீ.வி.கே.சிவஞானம்
போர் குற்றம் தொடர்பாக விசாரிக்கும் போது இரு தரப்புகளையும் விசாரிக்க வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
போர் குற்ற விசாரணை
போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது இரு தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறியது சட்டத்தரணி என்ற வகையில் இருக்கலாம் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
லங்காசிறீயின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் மற்றொரு விஷயம் இருக்கிறது. சுமந்திரனின் கருத்து அப்படியாக இருப்பினும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாராலும் விசாரணை நடத்த முடியாது.
தர்க்கவியலில் அது சரிவராது என்றும் அவர் தெரிவித்தார். சுமந்திரன் செய்தது எல்லாம் சரியென்று நான் வாதிட்டது இல்லை, விடுதலைப் புலிகளை நான் என்றும் விமர்சிக்கவில்லை, எதிர்க்கவில்லை என சுமந்திரன் தெளிவுப்படுத்தி இருந்தார் என்றும் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |