ஒரே இரவில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்.., லொட்டரியில் அடித்தது பேரதிர்ஷ்டம்
கேரள லொட்டரியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்ததால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை விதித்தது.
ஆனால், கேரள மாநிலத்தில் லொட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் லொட்டரி சீட்டுகள் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும்.
கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை முதல் பரிசு கொண்ட லொட்டரி சீட்டுகள் விற்பனையாகி வருகிறது.
சம்மர் பம்பர் லொட்டரி (Summer Bumper Lottery)
இந்நிலையில் சம்மர் பம்பர் லொட்டரிக்கான குழுக்கல் நேற்று நடைபெற்றது. இந்த லொட்டரிக்கான முதல் பரிசு SC308797 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது.
இந்த லொட்டரி டிக்கெட்டை வாங்கியவர், கன்னூர் மாவட்டத்தில் உள்ள கர்திகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான நாசீர் என்பவர் தான்.
இவர் கடந்த செவ்வாய் கிழமை தான் இந்த சம்மர் பம்பர் லொட்டரிக்கான டிக்கெட்டை வாங்கியிருந்தார். அதுவும் குலுக்கல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் லொட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
நமக்கெல்லாம் எப்படி பரிசுத்தொகை விழும் என்று நினைத்த நாசீர், பரிசுக்கான டிக்கெட் எண்னை அறிவித்ததும் தலையே சுற்றிவிட்டதாம்.
சாதாரன ஆட்டோ டிரைவரான நாசீர் ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார். மேலும், 50 லட்சம் கொண்ட இரண்டாவது பரிசுத்தொகை SA 177547 என்ற டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |