ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: பணம், வெற்றி என அதிர்ஷ்டம் பெறும் 4 ராசியினர்
Sun Transit In Sagittarius: சூரிய பெயர்ச்சி காரணமாக எந்தெந்த ராசியினர்கள் நன்மையை பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக இருக்கும் சூரியன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகின்றார்.
சிம்ம ராசியினர் அதிபதியான இவர், விருச்சிக ராசியில் பயணித்து வருகின்றார். இந்நிலையில் டிசம்பர் மாதம் 16ம் தேதி தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சியாக இவை இருக்கின்றது.
குருவின் ராசிக்கு சூரியன் செல்வதால் எந்தெந்த ராசியினர் இந்த காலக்கட்டத்தில் நன்மை அடைவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியின் 9வது வீட்டிற்கு சூரியன் செல்ல உள்ள நிலையில், பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், உங்களது செயல்திறனும் பாராட்டப்படுமாம். வணிகத்திலும் முன்னேற்றம் கிடைப்பதுடன், நிதி நிலையில் நல்ல உயர்வும் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினரின் 2வது வீட்டில் சூரியன் செல்வதால், நல்ல நிதி ஆதாயம் கிடைக்குமாம். வணிகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அனைத்து திட்டங்களும் வெற்றி பெறுவதுடன், கடின உழைப்பிற்கான பலனையும் பெறுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், முக்கிய வேலையினை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 4வது வீட்டிற்கு சூரியன் செல்ல உள்ள நிலையில், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்குமாம்.
பணியிடத்தில் உங்களது செயல்திறனுக்கு பாராட்டும் , பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வணிகத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தத்தினை பெறுவதுடன், நிதி நிலையும் வலுவடையுமாம்.

மீனம்
மீன ராசியில் 10வது வீட்டிற்கு செல்லும சூரியனால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதுடன், தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
தொழில் முன்னேற்றத்திற்கு வாய்ப்பும், வேலை தொடர்பான பயணத்தினையும் மேற்கொள்வீரகள்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நிதி நிலையில் நல்லதொரு முன்னேற்றம் காணப்படும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |