கோவாவில் ஆடம்பர வில்லா! 'லிட்டில் மாஸ்டர்' சுனில் கவாஸ்கரின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை இங்கே காண்போம்.
சுனில் கவாஸ்கர்
1970, 80களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கலக்கியவர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar).
இவர் 125 டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களுடன் 10,122 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் 'King of Test Cricket' என்று அழைக்கப்படுகிறார்.
புகழ்பெற்ற கேப்டனாக விளங்கிய இவருக்கு லிட்டில் மாஸ்டர் என்ற பெயரும் உண்டு. 76 வயதாகும் சுனில் கவாஸ்கர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும், பகுத்தாய்வாளராகவும் இருக்கிறார்.
கிரிக்கெட் போட்டிகள், முதலீடுகள், என்டோர்ஸ்மென்ட்ஸ் போன்றவை மூலம் சுனில் கவாஸ்கர் பெரும் செல்வத்தை ஈட்டினார்.
ஆடம்பர வில்லா
சுனில் கவாஸ்கருக்கு வடக்கு கோவாவின் அசாகோவில் 5,000 சதுர அடியில் Isprava எனும் ஆடம்பர வில்லா உள்ளது.
இதனை அவர் 2017ஆம் ஆண்டு ரூ.20 கோடிக்கு வாங்கியிருந்தார். இந்த அழகிய விடுமுறை இல்லம் நான்கு படுக்கையறைகள், ஐரோப்பிய பாணியிலான உட்புறங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள், துடிப்பான மலர் தோட்டங்கள் மற்றும் அதன் சொந்த தனியார் நீச்சல் குளம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள கவாஸ்கரின் சொத்துக்களில் மூன்று ஆடம்பரமான குடியிருப்புகள் உள்ளன. இதில் உயர்ரக வோர்லி பகுதியில் 2 நேர்த்தியான வீடுகளும், அரபிக் கடலின் காட்சிகளுடன் இருக்கும் 9 மாடி, கடல் நோக்கிய கட்டிடமான Sportsfieldயின் முழு எட்டாவது மாடியிலும் ஒரு குறிப்பிடத்தக்க அடுக்குமாடி குடியிருப்பும் அடங்கும். அதேபோல் பன்வேலில் அவருக்கு ஒரு சொத்தும் உள்ளது.
சொத்து மதிப்பு
இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கும் சுனில் கவாஸ்கரின் நிகர மதிப்பு ரூ.262 கோடி என மதிப்பிடப்படுகிறது.
கிரிக்கெட்டில் அதிக ஊதியம்பெறும் வர்ணனையாளர்களில் சுனில் கவாஸ்கரும் ஒருவர் ஆவார். இவரது ஆண்டு வருமானம் சுமார் ரூ.35 கோடி என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐபிஎல்லில் அவர் நீண்டகாலமாகப் பணியாற்றியதன் மூலம் கூடுதலாக ரூ.18.9 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
2025 ஐபிஎல் சீசனில் மட்டும் சுனில் கவாஸ்கர் ரூ.4.17 கோடி வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது.
கார்கள்
ஆடம்பர ஆட்டோமொபைல்களை விரும்புபவர் சுனில் கவாஸ்கர். அவரது கார் சேகரிப்பில் நேர்த்தி மற்றும் செயல்திறனுக்காக அறியப்பட்ட கார் அதிநவீன BMW 5 (E60 மொடல்) ஆகும்.
மேலும் MG Hector Plus என்ற ஆடம்பர சொகுசு கார் ஒன்றையும் இவர் வைத்துள்ளார்.
முதலீடு
1985ஆம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் இந்தியாவின் முதல் விளையாட்டு மேலாண்மை நிறுவனமான Professional Management Groupஐ இணைந்து நிறுவினார்.
இது வீரர் மேலாண்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப்களை கையாள்கிறது. இதுதவிர ரியல் எஸ்டேட், the board game startup Binca Games, Samco Ventures மற்றும் Chqbook உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவரது முதலீடுகள் பரவியுள்ளன.
அறக்கட்டளை சுனில் கவாஸ்கர் சமூகக் காரணங்களுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறார். இவர் the Heart-to-Heart Foundation அறக்கட்டளையின் ஆளுநர்கள் குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.
மேலும் அவர் தொடங்கிய CHAMPS அறக்கட்டளைக்கு தீவிரமாக பங்களிக்கிறார். COVID-19 தொற்றுநோய் காலத்தில், இவர் நிவாரண நிதிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்கொடைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |