விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ்! அவர் பேசியது?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கிய அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம் அங்கிருந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பு
கடந்த ஜூன் மாதம் 5 -ம் திகதி, போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner spacecraft) ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (International Space Station) சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பபட்டனர்.
இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஜூன் 6 -ம் திகதி சென்றடைந்தனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்தது.
ஆனால், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் பூமிக்கு திரும்புவார் என்றும் நாசா அறிவித்தது.
இந்நிலையில் இருவரும் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.
அப்போது சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், "இது என்னுடைய மகிழ்ச்சியான இடம். விண்வெளியில் இருப்பதை நான் விரும்புகிறேன். 8 நாட்களில் பூமிக்கு திரும்பியவுடன் சில திட்டங்கள் இருந்தது.
அதில் என்னுடைய தாயாருடன் நேரம் செலவிடுவது, குளிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவை இருந்தது. ஆனால், தற்போது எல்லாமே சர்வதேச விண்வெளி மையத்தில் தான்.
அதற்காக நாங்கள் தயாராகி விட்டோம். நாங்கள் எல்லோரும் அமெரிக்க குடிமகன்கள் என்பதால் அதிபர் தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான பணி.
இந்த வாய்ப்பை நாசா எங்களுக்கு வழங்கியுள்ளது. நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வாக்களிப்பதை எதிர்பார்க்கிறோம். இது மிகவும் அருமையானது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |