சுனிதா வில்லியம்ஸ் பற்றி கவலையில்லை: நாங்கள் பழகிவிட்டோம்.. தாயார் கூறிய விடயம்
விண்வெளி பயணத்தில் உள்ள தனது மகளின் பாதுகாப்பு குறித்து கவலையில்லை என்று சுனிதா வில்லியம்ஸின் தாயார் கூறியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் தாயார்
கடந்த ஆண்டு சூன் மாதம் முதல் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.
ஆறு மாதத்திற்கும் மேலாக விண்வெளியில் உள்ள அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸின் தாயார் மற்றும் குடும்பத்தினர் அவரது நீட்டிக்கப்பட்ட விண்வெளி பயணத்தின் மீதான நம்பிக்கை குறித்து பேசியுள்ளார்.
தனது மகளை விண்வெளி பயணத்தில் பார்த்தது கௌரவமாக கருதுவதாக போனி பாண்ட்யா கூறியுள்ளார்.
அவளைப் பற்றி கவலைப்படவில்லை
அவர் சுனிதா வில்லியம்ஸின் பாதுகாப்பு குறித்து கூறுகையில், "ஏற்கனவே அங்கு அவர் இருந்திருக்கிறார். நாங்கள் இதற்கு பழகிவிட்டோம். நான் அவளைப் பற்றி கவலைப்படவில்லை. அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்குத் தெரியும்.
என் மகள் போன்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருப்பதற்கும், இவ்வளவு நீண்ட மற்றும் கடுமையான பணிகளை மேற்கொள்வதற்கும் பாக்கியவானாக உணர்கிறார்கள்.
அவர்கள் இதை செய்வதை விரும்புகிறார்கள். மேலும் இதுபோன்ற ஒரு நீண்ட பாணியில் மேலே செல்ல அவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு" என்றார்.
விண்வெளி வீரர்களின் குடும்பத்தினரும் விண்வெளி பயணம் நீட்டிக்கப்பட்டது குறித்து எந்த துயரமோ, பதட்டமோ இல்லமால் உறுதியாக இருப்பதாக நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |