ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியரைக் காப்பாற்ற கடைசி முயற்சி
ஏமன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த செவிலியருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற கடைசி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செவிலியரைக் காப்பாற்ற கடைசி முயற்சி
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா (34), 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் செவியர் வேலைக்கு சேர்ந்தார்.
ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவர் முதலில் நிமிஷாவுக்கு உதவிய நிலையில், பின் அவரை துன்புறுத்தத் துவங்கி, அவரது பாஸ்போர்ட்டையும் பிடுங்கிவைத்துக்கொண்டுள்ளார்.
எப்படியாவது அவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்டு, தப்பி இந்தியாவுக்கு வந்துவிடவேண்டும் என திட்டமிட்ட நிமிஷா, அவருக்கு மயக்க ஊசி போட, துரதிர்ஷ்டவசமாக மயக்க மருந்தின் அளவு அதிகமாக, மஹ்தி உயிரிழந்துள்ளார்.
மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிமிஷாவைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், தற்போது, பிரபலமான, இஸ்லாமிய மத தலைவரான Kanthapuram A.P. Aboobacker Musliyar என்பவர் மூலம், மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஏமன் நாட்டில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால், அச்சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இரத்தப்பணம் என்னும் ஒரு தொகையை செலுத்தினால், அவர்கள் குற்றவாளியை மன்னிப்பதாக அறிவிப்பார்கள்.
அந்த இரத்தப்பணத்தை மஹ்தியின் குடும்பத்தினரை ஏற்றுக்கொள்ளச் செய்து, நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற Grand Mufti of India என்னும் பட்டம் கொண்டவரான Sheikh Abubakr Ahmad என்னும் Kanthapuram A.P. Aboobacker Musliyar முன்வந்துள்ளார்.
நிமிஷாவைக் காப்பாற்ற அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஏமனிலுள்ள மதத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும், அந்த மதத் தலைவர்கள் மஹ்தியின் குடும்பத்தினரை தொடர்புகொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மஹ்தி குடும்பம் அந்த இரத்தப்பணத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிமிஷா விடயத்தில் ஏதாவது நல்லது நடக்கமுடியும் என்பது இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |