சென்னையை துவம்சம் செய்து முதல் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்!
2022 ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
மும்பையில் டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணியும் மற்றும் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணியும் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த ஐடேஜா தலைமையிலான சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது.
உத்தப்பா (15), ருதுராஜ் கெய்க்வாட் (16), மொயின் அலி (48), அம்பதி ராயுடு (27), டுபே (3), ஐடேஜா (23), தோனி (3) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஐதராபாத் தரப்பில் பந்து வீச்சில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் நியமனம்!
இதைத்தொடர்ந்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஐதராபாத் அணி, 17.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி அபார வெற்றிப்பெற்றது.
அபிஷேக் சர்மா (75), கேன் வில்லியம்சன் (32) ரன்களில் ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி (39), பூரன் (5) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.
சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், 2022 ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
.@SunRisers win by 8 wickets to register their first win in #TATAIPL 2022.#CSKvSRH pic.twitter.com/aupL3iKv5v
— IndianPremierLeague (@IPL) April 9, 2022
விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி, புள்ளிப்பட்டிலில் 9வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூருடன் மோத உள்ளது. இந்தப் போட்டி ஏப்ரல் 12ம் திகதி டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.