உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவு முடிவுக்கு வரலாம்: நாடொன்றின் தேர்தல் முடிவுகள்
ரஷ்ய உக்ரைன் போரில், ரொமேனியா நாடு உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெரும் ஒரு அபாயம் உருவாகியுள்ளது.
தேர்தல் முடிவுகள்
ரொமேனியா நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் முன்னணி வேட்பாளர்களாக Calin Georgescu என்பவரும், Elena Lasconi என்னும் பெண்ணும் தேர்தல் களத்தில் உள்ளார்கள்.
முதல் சுற்று தேர்தலில் 99.9 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், Calinக்கு 22.9 சதவிகித வாக்குகளும், Elenaவுக்கு 19.16 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.
இறுதிச்சுற்றில் இருவரும் மோத உள்ள நிலையில், Calinஉடைய வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவுக்கு முடிவு
விடயம் என்னவென்றால், Calin, வலதுசாரிக் கருத்துக்கள் கொண்டவரும் நேட்டோவை கடுமையாக விமர்சித்துவருபவரும் ஆவார்.
அவர் ரொமேனியா உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்தவேண்டும் என்றும், ரொமேனியா தாக்கப்பட்டால், நேட்டோவுடன் இணைந்திருப்பதால் கிடைக்கும் ராணுவ ஒத்துழைப்பு ரொமேனியாவை பாதுகாக்க உதவாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், புடினை உலகின் உண்மையான சில தலைவர்களில் ஒருவர் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
ஆக, தேர்தலில் Calin வெற்றி பெறும் நிலையில், ரொமேனியா உக்ரைனுக்கு அளித்துவரும் ஆதரவை அந்நாடு நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |