போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
போர் நிறுத்தம் அறிவித்த வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் நேற்று தாக்கியழித்துள்ளது.
பதிலடியாக பாகிஸ்தான் ராணுவமும் இந்திய பகுதிகளில் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து, மே 10 ஆம் திகதி இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன் பின்னர், பாகிஸ்தான் துணை பிரதமர் Ishaq Dar போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
விக்ரம் மிஸ்ரி
அதை தொடர்ந்து, இந்தியா தரப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அதிகாரபூர்வமாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார்.
பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தில் இருந்தே அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை, விக்ரம் மிஸ்ரிதான் செய்தியாளர்கள் மூலமாக மக்களுக்கு அறிவித்து வந்தார்.
இந்நிலையில், போரினால் ஏற்படும் உயிர் இழப்பு, பொருளாதார இழப்புகளை அறியாமல், போரை விரும்பிய சிலர், போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காக விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.
இதன் காரணமாக, விக்ரம் மிஸ்ரி தனது எக்ஸ் பக்கத்தை அனைவரும் பார்க்க முடியாத வகையில் பூட்டியுள்ளார்.
அரசு ஊழியரை சங்கங்கள் ஆதரவு
இதனையடுத்து, விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஐ.ஏ.எஸ் சங்கம், "வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஐ.ஏ.எஸ். சங்கம் ஒற்றுமையாக நிற்கிறது.
The IAS Association stands in solidarity with Shri Vikram Misri, Foreign Secretary, & his family.
— IAS Association (@IASassociation) May 11, 2025
Unwarranted personal attacks on civil servants performing their duties with integrity are deeply regrettable.
We reaffirm our commitment to uphold the dignity of public service. pic.twitter.com/qahtRLfCLF
நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசு ஊழியர்கள் மீது தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது மிகவும் வருந்தத்தக்கது என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், ஐ.பி.எஸ் சங்கம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியோர் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |