இஸ்ரேல் ஆதரவு... மொத்தமாக ரூ 9167 கோடியை இழந்த உலகப் புகழ்பெற்ற நிறுவனம்
இஸ்ரேல் ஆதரவு நிலையை அடுத்து, அமெரிக்காவின் Starbucks நிறுவனமானது தனது மொத்த சந்தை மதிப்பில் 9.4 சதவீத இழப்பை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த சந்தை மதிப்பில் 9.4 சதவீதம்
அமெரிக்காவின் seattle நகரத்தை சேர்ந்த Starbucks நிறுவனமானது உலகளாவிய அரசியல் நெருக்கடியால் கடும் இழப்பை எதிர்கொண்டுள்ளது. மொத்த சந்தை மதிப்பில் சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ 9167 கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது.
@reuters
இது அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் 9.4 சதவீதம் என்றே கூறப்படுகிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் சரியானது தான் என Starbucks நிற்வாகம் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பாலஸ்தீன ஆதரவு மக்களாலும் அரபு நாடுகளில் குடியிருக்கும் இஸ்ரேல் எதிர்ப்பு மக்களாலும் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்க கோரப்பட்டது.
இந்த நிலையில், Starbucks நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து 12வது முறையாக சரிவை எதிர்கொண்டது. பங்கு ஒன்றின் விலை 115 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது 95.80 டொலருக்கு சரிவடைந்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் ஆதரவு நிலையால் இழப்பை சந்திப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும் புண்படுத்தவில்லை என்றே கூறி வருகிறது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதாக
மேலும், Starbucks நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் தெரிவிக்கையில், இந்த சவால்களை எதிர்கொண்டு மீண்டு வருவோம் என குறிப்பிட்டுள்ளார்.
@getty
ஸ்டார்பக்ஸ் மீதான சமீபத்திய புறக்கணிப்பு நடவடிக்கை என்பது இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள பல உலகளாவிய நிறுவனங்களை மொத்தமாக புறக்கணிக்க கோரப்பட்டதன் ஒரு பகுதி என்றே கூறப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்கள் மொத்தமாக புறக்கணித்துள்ளதால் எகிப்தில் செயல்பட்டு வந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
முன்னதாக Starbucks நிறுவனத்தின் தொழிலாளர்கள் அமைப்பு சமூக ஊடகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதாக வெளிப்படுத்தியது அந்த நிறுவனத்திற்கு பின்னடை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |