நெதர்லாந்தில் இந்திய உணவகம்., புதிய இன்னிங்க்ஸை தொடங்கியுள்ள சுரேஷ் ரெய்னா!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் தனது சொந்த உணவகத்தை திறந்துள்ளார்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் தனது புதிய சமையல் முயற்சியான இந்திய உணவு வகை உணவகத்தை திறந்துள்ளார்.
Raina Culinary Treasures of India என்ற பெயரில் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Suresh Raina
அதில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐரோப்பாவிற்கு தனித்துவமான சுவைகளை அறிமுகப்படுத்தும் ஒரு பகுதியாக இந்த உணவகம் தொடங்கப்பட்டதாக ரெய்னா குறிப்பிட்டார்.
ரெய்னா உணவகத்தின் சிறப்பு என்னவென்றால், வட இந்தியா மற்றும் தென்னிந்திய சுவைகளின் வளமான மசாலாப் பொருட்களுடன் இந்திய சுவைகளை இணைப்பதுதான், என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
Suresh Raina
ரெய்னா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
ரெய்னாவின் பதிவிற்கு பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அவரது புதிய தொடக்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங், அங்கு சாப்பிட வருகிறேன் என்றார்.
Suresh Raina
Suresh Raina
Suresh Raina
வெளிநாட்டில் உணவகம் திறக்கும் முதல் பிரபலம் ரெய்னா அல்ல. நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகி ஆஷா போஸ்லே ஆகியோர் நியூயார்க் மற்றும் பர்மிங்காமில் உணவகங்கள் வைத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்தியாவின் பல பகுதிகளில் உணவகங்களை வைத்திருக்கிறார்.
Raina Hotel, Raina Restaurant, Suresh Raina, Indian Restaurant in Amsterdam, Raina Restaurant Amsterdam
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |