22 குழந்தைகளுக்கு தாயான பெண்! 100 குழந்தைகளை பெற்றெடுக்க திட்டமிடுகையில் கோடீஸ்வர கணவருக்கு நேர்ந்த கதி
22 குழந்தைகளுடன் ஜார்ஜியாவில் வசிக்கும் இளம்பெண்.
சிறையில் உள்ள கோடீஸ்வர கணவரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என உருக்கம்.
ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் 22 குழந்தைகளுக்கு தாயான நிலையில் சிறையில் உள்ள தனது கோடீஸ்வர கணவரின் வருகையை எதிர்நோக்கி வழிமேல் விழிவைத்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.
ஜார்ஜியாவின் படுமி பகுதியில் வசித்துவரும் Kristina Ozturk (24) என்ற பெண்ணும், Galip Ozturk (57) என்ற கோடீஸ்வர தொழிலதிபரும் கணவன், மனைவி ஆவர்.
வாடகைத் தாயார் வழியாக Kristina 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முதல் கணவர் மூலம் அவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. வாடகைத் தாயார்களுக்காக மட்டும் சுமார் 168,000 யூரோ தொகையை செலவிட்டுள்ளார்.
இருவரும் இணைந்து மொத்தம் 105 பிள்ளைகளை வாடகைத் தாயார் மூலம் பெற்றெடுக்க முடிவு செய்தனர். ஆனால் தற்போது 21 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ள வழக்கில் Galip Ozturk கைதாகி சிறைக்கு சென்றுவிட்டார்.
105 பிள்ளைகள் தான் தங்களின் இலக்கு என கூறிவந்துள்ள நிலையில், Galip Ozturk கைதாகியுள்ளது, தங்களின் கனவு மட்டுமல்ல வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளதாக Kristina கண்கலங்கியுள்ளார்.
batumi/mama
அவர் கூறுகையில், என் கணவர் வருகைக்காக தான் காத்திருக்கிறேன். அந்த நாள் விரைவாக வரும் என எதிர்பார்க்கிறேன், அதே நேரத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
Galip இல்லாததை என்னால் தாங்க முடியவில்லை, என்னால் தனியாக தூங்கி எழுந்திருக்க முடியாது. அவரது புன்னகை, அவரது குரலை என்னால் கேட்க முடியவில்லை.
அதே நேரத்தில் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல முடியும், என் நாட்கள் ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் ஊழியர்களின் அட்டவணையைத் திட்டமிடுவது முதல் எனது குடும்பத்திற்கான ஷாப்பிங் வரை பல நல்ல நேரங்களும் தொடர்கின்றன என கூறியுள்ளார்.