போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்: உக்ரைன் நாட்டவர்கள் விருப்பம்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபோது, ரஷ்யாவை எதிர்த்து போரிடவேண்டும் என்ற மன நிலைமை பெரும்பாலான உக்ரைன் நாட்டவர்களுக்கு இருந்தது.
ஆனால், அது இப்போது குறைந்துவருவது சமீபத்திய ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்
Gallup, Inc. என்னும் ஆய்வமைப்பு, போர் தொடர்பில் 15 வயதுக்கு மேற்பட்ட உக்ரைன் நாட்டவர்கள் சுமார் ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உக்ரைன் நாட்டவர்களில் பத்தில் ஏழு பேர், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் விரைவில் ஒரு முடிவை எட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அமைதி விரைவில் ஏற்படப்போவதில்லை என்றே அவர்களில் பலர் கருதுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
போர் அடுத்த ஆண்டில் முடிந்துவிடக்கூடும் என கால்வாசிப்பேர் கருதும் நிலையில், பத்தில் ஏழு பேர், அடுத்த ஆண்டு வாக்கில் போர் முடிவடைய வாய்ப்பில்லை என்றே கருதுவதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆக, எப்படியாவது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனைகளுக்கு உட்பட்டாவது போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் எண்ணம் உக்ரைன் நாட்டவர்களிடையே அதிகரித்துவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |