கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம் - அடுத்த கேப்டன் யார்?
T20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யகுமார் யாதவ் நீக்கம்?
2024 ஆம் ஆண்டில் T20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய T20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையிலான இந்திய அணி, 2025 ஆசிய கிண்ணம், 2026 T20 உலக கிண்ணம் ஆகியவற்றை வென்று கொடுத்தாலும், சமீபகாலமாக பார்மமில் இல்லாமல் தடுமாறி வருகிறார். 2026 ஐபிஎல் தொடரில் 13 இன்னிங்ஸில் விளையாடி, 270 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய கேப்டனை பிசிசிஐ நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், T20 அணியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டனாகும் ஷ்ரேயாஸ் ஐயர்?
அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய T20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இஷான் கிஷன் அல்லது திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாத இறுதியில் அயர்லாந்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இருந்தே இந்த மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல், வைபவ் சூரியவன்ஷியை அணியில் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |