பிரான்சில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்... யார் என தெரியவந்ததால் அதிர்ச்சி
பிரெஞ்சு நகரம் ஒன்றில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கிய விடயம் தொடர்பாக, பரபரப்பை ஏற்படுத்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இளைஞர் கொல்லப்பட்டதை எதிர்த்து போராட்டம்
கடந்த செவ்வாய்க்கிழமை காலை, பிரான்சிலுள்ள Nanterre என்னுமிடத்தில், போக்குவரத்து விதிகளை மீறியதாக, Nahel (17) என்னும் இளைஞரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
Al Arabiya
இந்த சம்பவம் பிரான்சில் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது, Nahelக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய போராட்டக்காரர்கள் கடைகளை சேதப்படுத்துவது, தீவைப்பு போன்ற செயல்களில் இறங்க, பல்லாயிரக்கணக்கான பொலிசார் நாடெங்கும் குவிக்கப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். என்றாலும் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்
வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிசார் முயன்றுகொண்டிருக்கும்போது, மர்ம நபர்கள் சிலர் அவர்களுக்கு உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, Lorient என்னும் நகரில், தொப்பியும் மாஸ்கும் அணிந்த ஒரு கூட்டம் போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கியுள்ளது.
அது குறித்து பேசிய பொலிசார் ஒருவர், அவர்கள் வன்முறையை அடக்க பொலிசாருக்கு உதவியாக வந்துள்ளார்கள் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் மிக கொடூரமாக தாக்கினார்கள் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்
இந்நிலையில், அவர்கள் இராணுவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. Lorient நகரில் பெரிய இராணுவத் தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
Samaa English
ஆக, Lorient நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது இந்த இராணுவ தளத்திலுள்ள வீரர்கள் சிலர், முகத்தை மறைத்துக்கொண்டு போராட்டக்காரர்களை தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவம் மீதான இந்தக் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக, கடற்படை அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |