உக்ரைனில் கொல்லப்பட்ட சிறுமிகள் உடல்களில்"ஸ்வஸ்திகா” முத்திரை! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்
உக்ரைனில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமிகள் உடல்களில் ஸ்வஸ்திகா முத்திரையில் தீக்காயங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளாடிமிர் புடின் உத்தரவின் பேரில் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனுக்குள் புகுந்து போர் தாக்குதலை தொடங்கியது. இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தப் போர் சமயத்தில் ரஷ்ய ராணுவம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் சாடி வருகிறது.
?? came in ?? with military bands and columns of the Rosguard. But they were followed by mobile crematories. Why do you need them if you don’t believe in resistance? Now we know - to hide war crimes. This is not a performer's mistake. This is a planned genocide. #BuchaMassacre pic.twitter.com/koRdQbtbX8
— Михайло Подоляк (@Podolyak_M) April 3, 2022
இதையும் படிங்க: நிறுத்துகிறோம்! ரஷ்யா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு
இந்தச் சூழலில், 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளைக் கூட ரஷ்ய வீரர்கள் வன்புணர்வு செய்ததாகவும் பெண்களின் உடல்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும் வகையிலான நாஜி முத்திரையைக் குத்தியதாகவும் உக்ரைன் எம்பி லெசியா வாசிலென்க் சாடியுள்ளார்.
இந்நிலையில் கொல்லப்பட்ட பல சிறுமிகளின் உடல்களில் ஸ்வஸ்திகா முத்திரை போன்ற வடிவில் தீக்காயங்கள் இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதன்படி ஹொஸ்டோமல் நகரில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி உடலில் ஸ்வஸ்திகா முத்திரையில் தீக்காயங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்த வாசிலெங்க் பதிவில், ரஷ்ய வீரர்கள் கொள்ளையடித்து, துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்கிறார்கள். 10 வயது சிறுமிகள் கொல்லப்பட்டு அவர்கள் உடலில் ஸ்வஸ்திகா வடிவ தீக்காயங்கள் இருப்பதையும் காணமுடிகிறது.
ரஷ்ய ஆண்கள் இதைச் செய்தார்கள். ரஷ்ய தாய்மார்கள் அவர்களை வளர்த்தனர். ஒழுக்கக்கேடான குற்றவாளிகளின் தேசம் அது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
this is the body of the girl that was tortured to death in Gostomel.
— юля ?? (@futurmrsmin) April 4, 2022
They burned swastika on her. pic.twitter.com/awLXSVaRUc