உக்ரைன் மக்களுக்கு ராணுவ போர் பயிற்சி...ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் அதிரடி!
உக்ரைனிய மக்களுக்கு ஸ்வீடன் ராணுவம் சிறப்பு பயிற்சி வழங்க இருக்கும் நிலையில், இந்த பயிற்சியில் தற்போது பின்லாந்தும் தங்களை இணைத்து கொண்டுள்ளது.
ஸ்வீடன் ஆயுதப் படை நிபுணர்கள் உக்ரைனிய குடிமக்களுக்கு ராணுவத்தில் பணியாற்றுவதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தரவுள்ளனர்.
இந்த பயிற்சியானது கூட்டாளி நாடுகளுடன் இணைந்து உக்ரைனிய வீரர்களுக்கு, தங்கள் நாட்டின் மீதான ரஷ்ய படைகளின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்கொள்ளும் இராணுவ அறிவுறுத்தலை வழங்குவதற்கான பிரித்தானியாவின் முன்முயற்சியின் ஒற்றை பகுதியாகும்.
#Finland, following #Sweden, will take part in the training of the #Ukrainian military in the #UK. pic.twitter.com/VMfPNSyKBS
— NEXTA (@nexta_tv) August 8, 2022
பிரித்தானியாவின் இந்த முன்முயற்சியில் ஆகஸ்ட் 12 மற்றும் டிசம்பர் 32க்கு இடையில் 120 ராணுவ பயிற்றுனர்களை பிரித்தானியாவிற்கு அனுப்பும் என ஸ்வீடன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்வீடன் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் தெரிவித்துள்ள கருத்தில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது, மேலும் உலகின் பிற நாடுகள் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அதன் போராட்டத்தில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்வீடனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, பின்லாந்தும் இந்த ராணுவ பயிற்சியில் தங்களை இணைத்து கொள்வதாக அறிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில்...பாலஸ்தீனிய அதிகாரி சுட்டுக் கொலை: லெபனானில் பதற்றம்
மொத்தம் 10,000 உக்ரைனிய வீரர்கள் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ராணுவ பயிற்சி பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.