இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! எங்கே தெரியுமா?
ஸ்வீடனில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பயங்கர வேகமாக பரவி வருகின்றது. சீனாவின் வுஹான் பகுதியில் தோன்றிய வைரஸ் ஓராண்டு கடந்தும் அதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் ஸ்வீடன் நாட்டில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை வெகுவாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதார அமைப்பு கூறுகையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டால் அவர்கள் கொரோனாவுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடு குளிர்காலத்தை எதிர்நோக்கி வரும் நிலையில் இப்படி ஒரு முடிவை அரசு வெளியிட்டுள்ளது மருத்துவ நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட இந்த முறை 35 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.