ஸ்வீடன் பொதுத் தேர்தல்: ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் முன்னிலை பெறும் இடதுசாரி கூட்டணி
Swedish General Election Left Coalition Takes lead: ஸ்வீடன் பொதுத் தேர்தலின் ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
ஸ்வீடன் பொதுத் தேர்தல்
ஸ்வீடனில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது.
இந்த தேர்தலில் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசை அகற்றி விட்டு இடதுசாரி கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கருத்துக்கணிப்புகள்
நோவஸ்(Novus) கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய தரவுகளில், தற்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்(Ulf Kristersson) தலைமையிலான வலதுசாரி கூட்டணி கிட்டத்தட்ட 47% மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.
ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன்(Magdalena Andersson) தலைமையிலான இடதுசாரி கூட்டணி சுமார் 51.3% ஆதரவுடன் ஸ்வீடனில் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும். தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளில் இடதுசாரி கூட்டணி இந்த பொதுத் தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கருத்து கணிப்புகளை மீறி கிறிஸ்டர்சன் தலைமையிலான பழமைவாத கூட்டணி வெற்றி பெற்றால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையக்கூடும்.
இதற்கிடையில் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு விகிதமானது மிக குறைவாக இருக்க கூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய தரவுகள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |