ஓன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடும் நபரா? உங்களுக்காக Swiggy வழங்கும் நல்ல செய்தி
ஸ்விக்கி நிறுவனமானது எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து எச்டிஎப்சி கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்விக்கி எச்டிஎப்சி கிரெடிட் கார்டு அறிமுகம்
இந்தியாவில் ஆன்லைன் வழியாக உணவு டெலிவரி செய்வதில் முன்னிலையில் ஸ்விக்கி நிறுவனம் உள்ளது.
முதலில் உணவு மட்டும் டெலிவரி செய்த ஸ்விக்கி இறைச்சிகள், மளிகைப்பொருள்கள் போன்றவற்றை டெலிவரி செய்து வருகிறது.
இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனம் எச்டிஎப்சி வங்கியுடன் இணைந்து எச்டிஎப்சி கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இது மாஸ்டர் கார்டு நெட்வொர்க்கில் ஸ்விக்கி நிறுவனத்திடமிருந்து வரும் முதல் கோ பிராண்ட் கிரெடிட் கார்டு ஆகும்.
என்னென்ன சலுகைகள்?
இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்விக்கியில் மட்டுமின்றி பல இணையதளங்களிலும் சலுகைகள் கிடைக்கும்.
தற்போது உள்ள நவீன வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் மற்றும் கேஷ் பேக் முக்கியமானவையாக இருக்கிறது.
அந்தவகையில், எச்டிஎப்சி மாஸ்டர் கார்டுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கட்டணம் செலுத்தும் வகையில் செயல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஸ்விக்கியின் தலைமை நிதி அலுவலரான ராகுல் போத்ரா கூறுகையில், இதனால் வாடிக்கையாளர்கள் தினசரி ஷாப்பிங் செய்யும் போது, சலுகைகளும், பரிசுகளும் கிடைக்கும் என்று கூறினார்.
கேஷ்பேக் மற்றும் பரிசுகள்
நாம் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யும் பொதும், மளிகைப்பொருள்கள் ஆர்டர் செய்யும் போதும் ஸ்விக்கி எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாம், மற்ற இ காமர்ஸ் தளங்களான பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா, ஓலா, ஊபர் ஆகியவற்றை இந்த கிரெடிட் கார்டு மூலம் பயன்படுத்தினால் 5% கேஷ் பேக் கிடைக்கும்.
இதுகுறித்து, எச்டிஎப்சி வங்கியின் இந்தியாவின் தலைமை அதிகாரியாக இருக்கும் பராக் ராவ் கூறும் போது, தினசரி தேவைகளில் உணவு மற்றும் மளிகை பொருள்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது.
அதில் சலுகைகள் அளித்தால் இரு தரப்பினருக்கும் இடையே சௌகரிய மதிப்புள்ள திட்டமாக இது இருக்கும். மேலும் ஸ்விக்கி எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ஆனது தனிப்பட்ட ப்ரொடெக்ட் மற்றும் சேவைகளை பயன்படுத்த உதவும் என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |