நாடு முழுவதும்... ஏர் கண்டிஷனர்கள் தொடர்பில் சுவிஸ் வியாபாரிகள் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுவிஸ் சில்லறை வியாபாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்படலாம்
ஐரோப்பா முழுவதும் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் ஏர் கண்டிஷனர்களையும் மின்விசிறிகளையும் வாங்க போட்டி போடுகிறார்கள்.

சுவிட்சர்லாந்திலும், அடுத்த வெப்ப அலைக்கு முன் ஏர் கண்டிஷனர்களையும் மின்விசிறிகளையும் வாங்க மக்கள் போட்டி போடும் நிலையில், நாடு முழுவதும் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுவிஸ் சில்லறை வியாபாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
சுவிஸ் ஒன்லைன் ஸ்டோரான Galaxus, முந்தைய ஜூனை ஒப்பிடும்போது, இந்த ஜூன் மாதத்தில் விற்பனை 38 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், Galaxus மட்டுமின்றி Jumbo, Fust மற்றும் Fnac ஆகிய வியாபார நிறுவனங்களும் இப்போதைக்கு ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகள் கிட்டத்தட்ட காலியாகிவிட்டதாக தெரிவிக்கின்றன.
பொது நிறுவனங்களே பெரும்பாலான ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகளை வாங்கிக் குவித்துவிட்டனவாம்.
மேலும், ஆர்டர் செய்யப்பட்டுள்ள ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகள், ஆசியாவிலிருந்து, கோடை முடிவடையும் நிலையில், அதாவது, ஆகத்து மாத நடுப்பகுதி அல்லது செப்டம்பரில்தான் வந்து சேரும் என்றும் சுவிஸ் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்தின் நடுப்பகுதியிலிருந்து மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ள நிலையில், கடைகளில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகள் கையிருப்பு இல்லாததால் மக்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |