சுவிஸ் பொருளாதாரம்: உள்நாட்டு உற்பத்தி 0.5% வீழ்ச்சி
சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் மூன்றாவது காலாண்டில் 0.5% வீழ்ச்சியடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்த சுவிஸ் பொருளாதாரம்
2025 ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சுவிஸ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 0.5% வீழ்ச்சியடைந்து இருப்பதாக வெள்ளிக்கிழமை சுவிஸ் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சியானது ஏற்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரிவுக்கான காரணங்கள்
நாட்டின் தொழில் துறையின் வீழ்ச்சியே இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக SECO அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இரசாயன மற்றும் மருத்துவத் துறையில் ஏற்பட்ட மந்த நிலையே தொழில் துறையில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் உற்பத்தி துறை காலாண்டின் அடிப்படையில் 3% வீழ்ச்சியடைந்துள்ளது, கட்டுமான துறை 0.6% சரிவை கண்டுள்ளது.
சேவை துறையின் வளர்ச்சி
அதே சமயம் தொழில் துறையில் ஏற்பட்ட சரிவை ஈடு செய்யும் விதமாக நாட்டின் சேவை துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
உதாரணமாக நாட்டின் வர்த்தகத் துறை 1.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |