கடைசி 30 நிமிடங்களில் 5 கோல்., 4-1 கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப்-B பிரிவு ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணி போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரண்டாம் பாதியில் சுவிஸ் அணி அதிரடி காட்டியது. மாற்று வீரராக களமிறங்கிய ஜோஹன் மான்சாம்பி (Johan Manzambi), 71-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
பின்னர், 90-வது நிமிடத்தில் ஜோஹன் மான்சாம்பி மீண்டும் ஒரு கோலை அடித்து சாதனை படைத்தார்.

இதனிடையே, 84-வது நிமிடத்தில் ரூபென் வர்காஸ் (Ruben Vargas) அணிக்கான இரண்டாவது கோலை அடித்திருந்தார்.
கூடுதல் நேரத்தில் (90+7 நிமிடத்தில்) கேப்டன் கிரானிட் ஜாகா (Granit Xhaka) பெனால்டி மூலம் நான்காவது கோலை அடித்தார்.
போஸ்னியா அணியின் ஒரே ஆறுதல் கோலை எர்மின் மஹ்மிக் (90+3 நிமிடத்தில்) அடித்தார்.
போஸ்னியா அணி, டாரிக் முஹரேமோவிச் சிவப்பு அட்டை பெற்றதால் பத்து வீரர்களுடன் மட்டுமே ஆடியது. இதனால் சுவிஸ் அணிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த வெற்றியால் சுவிட்சர்லாந்து குரூப்-B-ல் முதலிடத்தை பிடித்துள்ளது.
20 வயது 247 நாட்கள் வயதான மான்சாம்பி, சுவிஸ் அணிக்காக உலகக் கோப்பையில் மாற்று வீரராக களமிறங்கி இரண்டு கோல்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |